வேலாயுதம் திரை விமர்சனம்-Vijay in Velayutham Movie Story Review in Tamil
வேலாயுதம் திரை விமர்சனம்-Vijay in Velayutham Movie Story Review in Tamil
லிட்டில் இந்தியா ரெக்ஸ்திரையரங்கம்.டிக்கட்டின் விலை 13 டாலர்கள்.தீபாவளி என்பதாலும் விஜயின் பிரமாண்டமான படம் என்று சொன்னதாலும் அதிக எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன்..!
திரை அரங்கம் முழுதும் விசில் சத்தம்...தூள் கிளப்பினார்கள் நண்பர்கள். தமிழண்டா...!
இனி சற்று விரிவாக..
ஹெலிகாப்டர் வானில் பறக்கிறது.பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லை என்று எதோ ஒரு பாலைவனத்தை காட்டுகிறார்கள்.அங்கு விமானம் தரை இறங்குகிறது.விமானத்தில் இருந்து தீவிரவாதிகளும் உள்துறை அமைச்சர் உலகநாதனும் இறங்குகிறார்கள்(அமைச்சரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கார்களாம்)
பக்கா கிரிமினலான அமைச்சரிடம் தீவிரவாதிகள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் ,சென்னை முழுதையும் குண்டுகளால் துளைக்க வேண்டும் என்று பேரம் பேசுகிறார்கள்.
மகிழ்ச்சி அடைந்த அமைச்சர் சென்னையை சுடுகாடாகா ஆக்குகிறேன் என சவால் விடுகிறார்.
இன்னொரு புறம் ஜெனிலியா பத்திரிகையாளராக வருகிறார்.அவரும் சக பத்திரிக்கையாளர் சிலரும் வில்லன் கும்பலின் தீவிரவாத செயல்களை படம் பிடித்து விடுகிறார்கள். வழக்கம் போல வில்லன் கும்பல் பத்திரிக்கையாளர்களை துரத்துகிறது.ஜெனிலியாவின் சக பத்திரிக்கையாளர் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்துகிறார்கள்.ஜெனிலியாவையும் இன்னொரு பத்திரிக்கையாளரையும் வயிற்றில் குத்தி எதோ ஒரு ஆற்றில் வீசுகிறார்கள்.
வில்லன்கள் குத்திவிட்டு தப்பித்து செல்லும்போது வில்லன்களின் கார் எதேச்சையாக விபத்து ஏற்பட்டு சுக்கு நூறாக வெடித்து சிதறுகிறது.அந்த கூட்டம் அழிகிறது.
குத்தி ஆற்றில் வீசப்பட்ட ஜெனிலியா மட்டும் பிழைத்து தவழ்ந்து வந்து பேனாவை எடுத்து .தீ வைத்து கொளுத்திய சக பத்திரிக்கையாளரின் உடலில் இந்த தீவிரவாத கும்பலை கொன்றது என எழுதிவிட்டு மேலே பார்க்கிறார் வேல் தெரிகிறது உடனே வேலாயுதம் என எழுதி, அவர் அக்கிரமக்காரர்களை அழிப்பார் என ஒரு பேப்பரில் எழுதி வைத்து விட்டு மயக்கமாகிறார்.
வேலாயுதம் விஜயும் அவர் தங்கை சரண்யாவும் கிராமத்தில் கடும் சேட்டை செய்கிறார்கள்.அதனால் ஊர் கிராமவாசிகளுக்கு கோபம் இருந்தாலும் இவர்களின் அண்ணன்,தங்கை பாசம் ஒன்றும் செய்ய விடாமல் கட்டி போடுகிறது.
வேலாயுதம் ,தங்கையின் திருமணத்திற்காக சென்னையில் இருக்கும் ஒரு சீட்டு கம்பெனியில் சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். தங்கையின் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் அதை எடுக்க சென்னைக்கு செல்கிறார். சென்னைக்கு செல்லும் வழியில் எதேச்சையாக நடக்கும் விசயங்கள் இவர்தான் வேலாயுதம் என மக்களை நம்ப வைக்கிறது.
மக்கள் அனைவரும் வேலாயுதத்தை தெய்வமாக பார்க்கிறார்கள்.இதெல்லாம் ஊருக்கே தெரியுமாம் ஆனால் வேலாயுதத்திற்கு மட்டும் தெரியவே தெரியாதாம்..!
பிறகு ஜெனிலியாவே வந்து சொல்ல..!!! வேலாயுதம் அசந்து போகிறார்..உடனே வேலாயுதத்திடம் ஜெனிலியா ”நிஜமாகவே நீங்கள் ஏன் வேலாயுதமாக மாறக்கூடாது என்று கேட்கிறார்?” அதற்கு வேலாயுதம் எனக்கு என் தங்கை போதும் என்று சொல்லி நான் உருவாக்கிய அந்த வேலாயுதத்தை நானே அழித்துவிடுகிறேன் என்று வெளியேறுகிறார்.
இப்போது இடைவேளை....
இதற்கிடையில் சந்தானம் குடும்பம் திருட்டு குடும்பம்.தானும் அந்த திருட்டு லிஸ்டில் சேர நிறைய காமெடி பண்ணுகிறார்.கடைசிவரை திருடன் பட்டம் கிடைக்காமலே போகிறது இவருக்கு..!
சீட்டு கம்பெனியில் போட்ட பணத்தை எடுக்க செல்கிறார் வேலாயுதம்.அங்கு சீட்டு கம்பெனி மூடப்பட்டு இருக்கிறது. பணம் போட்டவர்கள் எல்லாம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.காவல்துறை .இவர்களை விரட்டுகிறது.அதில் ஒருவர் “மக்கள் கைவிடலாம்,போலீஸ் கைவிடலாம்,ஏன் கடவுளே கூட கைவிடலாம் ஆனா எங்க வேலாயுதம் கைவிடமாட்டான்டா,வேலாயுதம் வருவாண்டா என்கிறார்.
உடனே விஜய் ”வேலாயுதமாக” அவதாரம் எடுக்கிறார்.
பிறகென்ன வில்லன்களை பறந்து பறந்து அடிக்கிறார்.
படத்தின் இறுதியில் யார் “வேலாயுதம் ” என்பதற்கு ஒரு செய்தி சொல்கிறார்.
விஜயிடம் வேலாயுதம் இருக்கிறதோ?இல்லையோ? ஹன்சிகா மோத்வானியிடம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கூல் ஆயுதம் ஒன்று இருக்கிறது.படம் முழுக்க இடுப்பு தொப்புள் என பெரிதாக காட்டுகிறார்.
சில பஞ்ச், வசனம் (தத்துவங்கள்)
1.உழைச்சு சாப்பிடுறவனோட வியர்வை,தாய்ப்பாலைவிட சிறந்தது.
2.உங்க நாட்டுல வாழுற முஸ்லீம்களை விட ,எங்கள் நாட்டுல வாழுற முஸ்லீம்கள் பாதுகாப்பா இருக்காங்க.
3.என் தங்கச்சி சமையல்ல புலி ,அதுக்கு நாங்க பலி..!!!
4.வில்லன்: வாடா வா உன்னத்தான் தேடிகிட்டு இருந்தேன்..!
விஜய் : நீ தேடிகிட்டு இருந்தது என்னை இல்லடா..!!! உன்னோட எமன...!!!
5.கத்தியால போட மட்டும் இல்ல,சீட்ட கிழிக்கவும் முடியும்(இப்டித்தான் படத்துல விசய் அறிமுகமாகிறார்)
6.சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவோம்,இதுல நீ காட்டுனு வேற சொல்ற..!!!
பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.இசையை ஆண்டனி நன்றாக செய்துள்ளார்.ஒளிப்பதிவும் நன்று.
வேலாயுதம் ஒரு கற்பனை:-
படம் பார்க்கலாமா வேண்டாமா?
இப்படத்தில் யதார்த்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.முழுக்க முழுக்க பெரிய ஹீரோக்களுக்கான கமெர்சியல் படம். நீங்கள் விஜய் ரசிகராக இருந்தால்,விஜய் ரசிகனுக்கான படத்தை பார்க்க விரும்பினால்,உங்களுக்கான படம் இதுதான்.! மற்றவர்களுக்கு சொல்லவே வேண்டாம்...இருக்கவே இருக்கு ஆயிரம் இணையம்..!!!
No comments:
Post a Comment