Saturday, October 15, 2011

அம்புலி 3D


வளர்ந்த குழந்தைகளுக்கான படம் "அம்புலி 3D"


சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத்தவர்களாக இருந்தாலும்,
அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம்.
 'மாய மோதிரம்', 'ஜெகன் மோகினி' போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள்
என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை.
எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஃபோன் செய்யும் நண்பர்கள் முதற்கொண்டு பலரும் என்னிடம்
 'அம்புலி 3D' குழந்தைகள் படமா? அனிமேஷன் படமா? என்றுதான் கேட்கிறார்கள்... இது கண்டிப்பாக
குழந்தைகள் படமல்ல... அனிமேஷன் படமுமல்ல... 'அம்புலி 3D', குழந்தைகள் முதல் பெரியவர்கள்
 வரை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான ஒரு திரைப்படம்.

Ambuli
கதை

இது 1978ஆம் ஆண்டு நடக்கும் கதை... 1978-ல் செல்ஃபோன் கிடையாது, எல்லா இடங்களுக்கும்
 பஸ் வசதி கிடையாது, ரேடியோவை கடவுளாகவும், டெலிஃபோனை தூரதேசத்து நண்பனாகவும்
போற்றி வந்த காலக்கட்டம். அந்த காலக்கட்டத்தில் இருந்த கல்லூரியிலும், அதற்கு சற்று
தொலைவில் இருக்கும் ஒரு தொ(த)ன்மை மாறாத கிராமம் ஒன்றிலும் நடக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்களே அம்புலி 3D...

3D

X மற்றும் Y ஆக்ஸிஸ் மட்டுமில்லாமல்  Z ஆக்ஸிஸ் காட்டுபவையே இந்த 3D. இதில் காட்சிகள்
கண்ணுக்கு முன்னாலும் வரும், திரைக்கு உள்ளேயும் செல்லும். சிறுவயதில் நாம் பார்த்த 'மைடியர் குட்டிச்சாத்தான்'-ல், கண்முன்னே வந்து நின்ற ஐஸ் க்ரீம்களையும், பலூன்களையும் கவர நமது
 கைகள் நீண்டு முன்  சீட்டில் இருந்தவரின் தலையை பிடித்திருக்கும். அதே போல சமீபத்தில் நாம்
பார்த்த ரசித்த 'அவதார்' திரைப்படத்தில் கண்முன்னால் வரும் விஷயங்களை குறைத்து திரையில்
 உள்பக்கமாக தெரியும் ஆழத்தை காண்பித்திருந்தார்கள். அதுவும் 3Dதான். இவையிரண்டும்
 'அம்புலி 3D'யில் சரிசமமாக கையாளப்பட்டுள்ளன.

நடிகர்கள்

அஜய், ஸ்ரீஜித், சனம், ஜோதிஷா, தம்பி ராமையா, கலைராணி, 'நான் கடவுள்' ராஜேந்திரன்,
ஜெகன், தேனி முருகன், டைரக்டர் ஜெகன், உமா ரியாஸ், பாஸ்கி, கராத்தே ராஜா, டைரக்டர்
கிருஷண் சேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் முக்கியமான கதாபாத்திரமொன்றில் திரு.
 பார்த்திபன் நடித்திருக்கிறார்.

மேலும் அம்புலி பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளை க்ளிக்கவும்
திரைப்படத்தின் வெப்ஸைட் : www.ambuli3d.com

எனது படப்பிடிப்பு அனுபவத்தை படிக்க : http://hareeshnarayan.blogspot.com

படக்குழுவினரின் அனுபவங்களை படிக்க : http://ambuli3d.blogspot.com

திரைப்படத்தின் ஃபேஸ்புக் முகவரி : www.facebook.com/ambuli3d

அம்புலி பற்றி அவ்வப்போதைய தகவல்களை தெரிந்து கொள்ள : www.twitter.com/ambuli3d

திரைபடத்தின் காணொளிகளை காண : www.youtube.com/ambuli3d

No comments:

Post a Comment