பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் "செர்ன்' என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் "டெவட்ரான்' என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
சுவிஸ் - பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் "ஜீரோ' டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் "எலக்ட்ரான் ஓல்ட்' ஆற்றல் ஏற்பட்டது. "செரன்' அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், "பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.
இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து "செரன்' தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த "இயற்பியல் உயர் சக்தி' என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.
தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். "செரன்' சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்' என்றார்.
"கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.
நான் ஹாலிவுட் படங்கள் பார்க்கத் துவங்கிய காலத்தில் இருந்து தற்போதுவரையிலான அமெரிக்காவின் பெருமையை பறைசாற்றும் படங்களில், பெரும்பான்மையான வில்லன், ரஷ்ய நாடு அல்லது ரஷ்ய ராணுவமாகத்தான் இருந்தது-இருந்து வருகிறது..
அமெரிக்கா-ரஷ்யா, இடையே எப்போதும் இருந்துவந்த பனிப்போரை மையமாக வைத்து ஹாலிவுட் நன்றாகவே கல்லா கட்டிவிட்டது. அவைகள் சொல்லிச் சொல்லி வளர்த்த அமெரிக்க மக்களில் இளையோர் அன்றளவும் ரஷ்யா என்றாலே தங்களது விரோத நாடு என்பதை உள்வாங்கிக் கொண்டனர். உலகளவில் அமெரிக்காவை வீழ்த்தவே ரஷ்யா தினம்தினம் அல்லல்படுகிறது என்பது போன்ற பிரமையையும் உருவாக்கி வந்தது ஹாலிவுட் சினிமா.
இப்போது அதுபோன்ற தேச பக்தியை முதன்முதலாக நமக்குள் ஊட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். சீனா, இந்தியாவை அழிக்கவே நினைக்கிறது என்று இவரது கற்பனையில் உருவான ட்ரீட்மெண்ட்டுக்கு பொட்டு வைத்து பூ வைக்கும்விதமாக, போதி தர்மர் என்னும் தமிழரும் கிடைத்துவிட... அலங்காரம் பண்ணி முடித்துவிட்டார்..!
நிச்சயமாக இந்தப் படம் தமிழின் முதன்மையான திரைப்படமோ, அல்லது காவியமான, உன்னதமான திரைப்படமோ இல்லை. ஆனால் குறிப்பிடத்தக்கத் திரைப்படம்.
முருகதாஸ் போதி தர்மர் பற்றிக் கூறும்வரையில், எனக்கு இவரைப் பற்றித் தெரியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். அதன் பின்புதான் அவரைப் பற்றி விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்து கொண்டேன். சீன அரசும், சீனர்களும் போதி தர்மர் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ஒரு தமிழர்(இது ஒரு பெரிய சர்ச்சையில் உள்ளது. இதனை வேறொரு பதிவில் பார்ப்போம்) என்பதை ஒத்துக் கொண்டு அவருக்குரிய கவுரவத்தைக் கொடுத்திருக்கும்போது, இத்தனை நாட்களாக இதனைப் பற்றி தெரிந்தவர்கள் ஏன் வெளியில் சொல்லாமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழ்ச் சினிமா வர்த்தகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக குங்பூ சண்டை படங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குங்பூ ஆஃப் செவன் ஸ்டெப் என்ற திரைப்படமும், ஷாலின் டெம்பிள் என்ற திரைப்படமும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட திரைப்படங்கள். இவற்றை பார்த்துதான் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் சண்டைக் காட்சிகளில் கொஞ்சம் முனைப்பையும், அக்கறையையும் காட்டினார்கள் நமது இயக்குநர்கள். ஜாக்கிசானின் திரைப்படங்களின் ரிலீஸின்போது கமல், ரஜினிக்கு வரும் கூட்டத்தைப் போல கூட்டம் கூடியதை, தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது.
இத்தனை நெருங்கிய தொடர்புகள் இருந்தும், இந்த்த் தகவல் மட்டும் இத்தனை நாட்களாக வெளியில் வராமல் இருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.
இப்போது இதனை உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையோடு போதி தர்மர் பற்றி திரைப்படமெடுக்க முன் வந்த முருகதாஸின் முயற்சிக்கு எனது வந்தனங்கள். வேறு யாராவது எடுத்திருந்தால்கூட போதிதர்மர் இந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் ரீச் ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் முருகதாஸ் வணக்கத்துக்குரியவர்..!
திரைப்படமாக பார்க்கப் போனால் முதல் 20 நிமிடங்களில் எடுத்திருப்பதையே முழுத் திரைப்படமாக உருவாக்கியிருக்கலாம். அதனை இன்றைய காலக்கட்டத்தோடு ஒப்பிட்டு இன்றைய தமிழ்ச் சினிமாவின் வியாபாரத்துக்கும் ஏற்றார்போல் செய்ய முனைந்தது முருகதாஸின் தவறல்ல. ஆனால் படம் முழுமையடையாமல் இருக்கும்போது, இத்திரைப்படம் தமிழ்ச் சினிமாவின் காவியப் படம்.. இதுபோல் எவரும் படம் எடுக்கவில்லை.. கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் என்றெல்லாம் அவர் பேசியது இப்போது படத்தின் ரிசல்ட்டுக்கே எதிராகப் போய்விட்டது..
இப்படியெல்லாம் பேசாமல், “இது புதுமையான பேக்கிரவுண்ட்டில் வழக்கமான கரம் மசாலா படம்தான்..” என்று அண்ணன் முருகதாஸ் சொல்லிவிட்டுப் போயிருந்தால், இத்தனை சர்ச்சைகள் வந்திருக்காது..! ஓவர்.. படத்துக்கு வருவோம்..!
முதல் 20 நிமிடங்களில் போதி தர்மரின் வாழ்க்கை வரலாறு சொல்லும்போது ஏற்றி வைத்த பெப், அடுத்த சில காட்சிகளிலேயே நமநமத்துப் போய் கீழிறங்கிவிட.. அதற்குப் பிறகு கடைசி 20 நிமிடங்களில் மட்டுமே படத்தில் மனம் லயிக்கிறது. இடைப்பட்ட நேரங்களில் நடப்பதையெல்லாம் நல்ல இயக்கமாக இருந்தும், ஒரு சீரியல் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டியதாகிவிட்டது.. சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யாவின் பார்த்தவுடன் காதலிலேயே படம் சாதாரண படமாகிவிட்டது.. முருகதாஸின் உதவியாளர்கள் இதைக் கூடவா எடுத்துச் சொல்லாமல் விட்டார்கள்..!?
போதி தர்மருக்காக சூர்யா மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும் சண்டைக் காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்தி அதையும் கொலை செய்திருக்கிறார்கள். முதல் ஒரு வாரத்தில் படம் பார்க்கப் போகும் அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களும், இதனால் ஏமாறப் போவது நிச்சயம். குங்பூ படங்களும், ஜாக்கிசானும் எதை குங்பூ என்று சொல்லியிருந்தார்களோ, அதுவெல்லாம் இல்லாமலேயே இதுதான் குங்பூ சண்டை என்று சொல்லி முடித்திருக்கிறார் முருகதாஸ்.
சூர்யா போதி தர்மர் கேரக்டரில் அழகாக இருக்கிறார். நஞ்சு கலந்திருக்கும் உணவைக் கையில் எடுத்து சுவைக்கும்போது அவர் முகம் காட்டும் எக்ஸ்பிரஷன்.. இது சூர்யா என்கிறது..! இந்த சூர்யா சண்டையிடும் காட்சிகளும் குங்பூ கலைக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதால் அகாசய சூரனாகவே காட்சியளிக்கிறார். சர்க்கஸ் சூர்யா வழக்கம்போல காதலிக்க அலையும் பேட்பாயாகவே தெரிகிறார். சர்க்கஸிஸ் செய்திருக்கும் இவருடைய காட்சிகளைத்தான் இப்படி பாராட்டியிருந்தாரா முருகதாஸ்..? ஐயோடா முருகா.. இதைத்தான் சொல்ல முடியும்..!
சர்க்கஸ் சூர்யா சீரியஸாவதை மிக காமெடியாக எடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் தன்னை சர்க்கஸ் வாசலில் இறக்கிவிட்டுச் செல்லும் ஸ்ருதியைப் பற்றி சித்தப்பா சொல்லும் செய்தியைக் கேட்டவுடன் படாரென்று பொங்கியெழுந்து ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று கொதிக்கும் அந்தக் காட்சி.. டிவி சீரியல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..!
ஸ்ருதிக்கு மிக பொருத்தமான அறிமுகம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று.. ஸ்ருதியின் கண்கள் ஏதோ சொல்ல வருவதைத்தான் அவருடைய அறிமுகக் காட்சியில் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அந்தக் காட்சியில் கோட்டைவிட்டுவிட்டார்கள்.
குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது.. அழகு.. சூர்யாவைவிடவும் அழகாக நடனமாடியிருக்கிறார். கப்பல் மீது ஆடும் அந்த ஒரு ஸ்டெப் போதும் அம்மணிக்கு.. கான்பரன்ஸில் தமிழர்களைப் பற்றி பொங்கியெழும் காட்சியில் ஒரு துளி கண்ணீர்கூட சிந்தாமல் கண்ணீரைத் தேக்கி வைத்த நிலையில் ஸ்ருதியின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.. ஆடைக் குறைப்பில் அதிகம் அக்கறை காட்டாமல் அவரை நடிக்க வைப்பதிலேயே முருகதாஸ் தீவிரம் காட்டியிருக்கிறார்..!
இந்தியாவையும், இலங்கையும் போட்டுத் தாக்கிவிட்டு, சந்தடிச்சாக்கில் இட ஒதுக்கீட்டின் மீதும் பாய்ந்திருக்கிறார் முருகதாஸ். யாரும் இதை இன்னும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தப்பித்தார் இயக்குநர். படத்தில் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வசனத்திலும், இலங்கையை மறைமுகமாகத் தாக்கிய வசனத்திலும், இலங்கை சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!
சர்க்கஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமிக்க வைக்க எத்தனையோ இருந்தும் ஒளிப்பதிவு மந்தமாக இருந்த்து ஏன் என்று தெரியவில்லை. சூர்யா, ஸ்ருதியின் பர்ஸை லவட்டும் காட்சிகளிலெல்லாம் கேமிராமேனின் லென்ஸும் லவட்டாகிவிட்டது போலும்.. சில இடங்களில் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு ஒன்றுமேயில்லை..
போதி தர்மர் சம்பந்தப்பட்ட காட்சிகள், பாடல் காட்சிகள், இறுதிக் காட்சியிலும் மட்டுமே சுழன்று, சுழன்று வேலை பார்த்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் அசோசியேட் வேலை பார்த்திருப்பாரோ..?
வில்லன் நடிகரான அந்த டோங்லீ. நல்ல தேர்வுதான் ஆனால் அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார்..! ஸ்ருதிக்கு உதவிக்கு செய்யும் மாலதி என்ற பெண் நல்ல அழகு. சினிமாவுக்கேற்ற முகம்.. முயன்றால் ஹீரோயினாகலாம்..!
நாய்க்கு ஊசி போட்டு நோயைப் பரப்பும் காட்சிகளின் பிரம்மாண்டம் பயமூட்டுகிறது. இந்தக் காட்சியை விஸ்தாரமாக காட்டினாலும் எடுக்கப்பட்டவிதம் மிக நேர்த்தி..!
லீ, சூர்யா, ஸ்ருதி விரட்டல் காட்சிகளில் பலவற்றை அடுத்த்து இதுதான் என்பதை தொடர்ச்சியாக சினிமா பார்த்து வருபவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் நினைப்பதுதான் ஸ்கிரீனிலும் வருகிறது. நம்மை கெளரவிக்க வேண்டும் என்பதற்காகவே முருகதாஸ் இதைச் செய்திருக்கிறாரோ..? வாழ்க இயக்குநர்..!
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஆடியோ ரிலீஸின்போதே வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது முன் அந்திச் சாரல் பாடல். படமாக்கப்பட்டவிதமும் பிரெஷ்னஸ்.. அழகு.. பின்னணி இசையில் பல இடங்களில் பரபரப்பை ஊட்டியிருக்கிறார். சில இடங்களில் அதுவே அலங்கோலமாகவும் தெரிகிறது. அடிக்கடி வரும் தீம் மியூஸிக் காதைக் குடைகிறதே தவிர.. வேறு எதையும் செய்யவில்லை..!
இறுதியில் டோங்லீ வீழ்வார் என்று தியேட்டர் வாட்ச்மேனுக்கே தெரியுமென்பதால் அதிக சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது சினிமா ரசிகர்களுக்கு.. லாஜிக் மீறலில் இந்தப் படத்தில் செய்திருக்கும் தவறுகளைப் பட்டியலிட்டால் அதை வைத்தே இன்னொரு சினிமா எடுத்துவிடலாம்..!
ஹிப்டினாசம் முறையிலேயே அனைவரையும் திசை திருப்ப முடியுமெனில், ஸ்ருதியையும், சூர்யாவையும் மடக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அத்தனையையும்விட்டுவிட்டு 16 ரீல்களுக்கு கதையை நகர்த்த வேண்டி இத்தனை அதகளம் செய்திருக்கிறார்கள்.
நோக்கு வர்மக் கலையால், போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே நுழைந்து பல காவலர்களை சாகடித்த பின்பும் அவரைத் தேடாத போலீஸ் என்று சொல்லி தமிழ்நாட்டு போலீஸை மிகவும் கேவலப்படுத்திவிட்டார் முருகதாஸ். இந்தப் படத்தை முருகதாஸின் கேரியரில் மிக முக்கிய படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு போனதற்கு இந்த ஒரு லாஜிக் மீறலையே உதாரணமாகச் சொல்லிவிடலாம்..!
டோங்லீ இறுதிக் காட்சியில் மரத்தையே தூக்கும் டூ மச்சான ஷாட்டுகள், சர்க்கஸை நிஜமாகவே கோமாளிகளின் கூடாரமாகக் காட்டியது.. 300 கோடி ரூபாயை ஸ்விஸ் வங்கியில் போட்டிருப்பதாக சாதாரண மெயில் மூலம் கண்டுபிடிப்பது.. சூர்யா திடீரென்று தனி டிராக்கில் சென்று பேராசிரியரை கடத்துவது.. சூர்யாவின் குடும்பத்தினரின் வருகையும், ஆன் தி ஸ்பாட்டில் காணாமல் போவதுமாக.. எண்ணற்ற சினிமா விதிமீறல்களை வைத்திருப்பதால் முருகதாஸ் தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த முறை தோற்றுப் போனவராகவே காட்சியளிக்கிறார்..!
நான் முன்பே சொன்னதுபோல சீனா-இந்தியா எதிர்ப்பு என்ற ஒன்றைக் காட்டி இந்திய தேசியத்தைக் கட்டிக் காப்பதற்காக போதி தர்மரின் டி.என்.ஏ. மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது என்று படத்தின் ஒன்லைனை வைத்துவிட்டு, “தமிழர்கள்ன்னா இந்தியாவிலேயும் அடிக்கிறாங்க.. வெளிநாட்டுலேயும் அடிக்கிறாங்க.. எங்க போனாலும் அடி வாங்குறது தமிழர்கள்தான்”னு கொந்தளிக்கிற டயலாக்கை வேறு வைத்திருப்பது இடிக்கிறதே..!
இந்திய தேசியம் இருந்தாலென்ன? நாசமாப் போனாலென்ன என்பதுதான் இன்றைய பெருவாரியான தமிழர்களின் மனநிலை. இதையாவது அண்ணன் முருகதாஸ் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளட்டும்..!
நிச்சயம் பார்க்கக் கூடாத, வேண்டாத படமல்ல. அதே சமயம் பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல. நேரம் கிடைத்தால் பாருங்கள்..!
ராணா(ரானா) ரஜினிகாந்த் தகவல்கள்-Rana Rajinikanth Movie Stills,Photos,Images,Wallpapers,Songs and Latest News.
ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கவிருக்கும் ராணா திரைப்படத்தை அகில உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சினிமா என்றால் அழகே முக்கியம் என்ற அடிப்படையை மாற்றியமைத்து உல்க ரசிகர்களின் மனதை அன்பால்,தன் ஸ்டைலான நடிப்பால் அடிமையாக்கியவர் சூப்பர் ஸ்டார்.
அழகு,திறமை மட்டுமே என்றும் வென்றுவிடாது..அதைவிட பண்பும்,அன்புமே மக்களின் மனதில் என்றும் ஆட்சிசெய்யும் என சொல்லாமல் நிரூபித்தவர். wesley harris எழுதிய Nice Guys Can win என்ற புத்தகம் இதற்கு சான்று.அழகு என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும் ரஜினியின் ஸ்டைல் அழகின் அழகு.!!!
ரஜினி ரஜினிதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுருக்கமான வரலாறு:-
அந்த அதிகாலைக்கு தெரியாது அன்றுமுதல் இந்த பூமிக்கு இரண்டு சூரியன்கள் என்று.காலண்டருக்கு தெரியாது இந்த தினம் திருவிழா தினம் என்று.அந்த நாள் டிசம்பர் 12 1950. அந்த குழந்தைக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சிவாஜி ராவ் கேய்க்வாட்.
மஹாராஸ்ட்ர குடும்பத்தில் ஜிஜா பாய்,ராமோஜிராவ் கேய்க்வாட்க்கு மகனாக பிறந்தார். இந்த குழந்தை கண்ட முதல் சோகம் 5 வயதில் அம்மாவின் மரணம்.அம்மாவை இழந்த இந்த குழந்தை அன்பிற்கும் பாசத்திற்கும் நிறையவே ஏங்கியது.
பிறகு பள்ளிப்படிப்பு ஓய்வு நேரத்தில் வேலை செய்வது என வாழ்க்கை நகர்ந்தது.அப்போதைக்கு இவருக்கு இருந்த ஒரே ஆறுதல் அண்ணன் சத்யநாராயணராவ் மட்டுமே. இந்த நாட்களில் தமிழகமே தனக்கு விசிலடிக்க போகிறது என தெரியாமல் தனக்கு தானே விசிலடிக்க தொடங்கினார் சிவாஜிராவ் கேக்வாட். பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் ப்ஸ் கண்டக்டராக ஒரு புதிய பாதையில் பயணிக்க தொடங்கினார்.
கன்னட நாடக ஆசிரியர் முனியம்மாவின் நாடகங்களில் துரியோதனன் வேசம் கட்டினார். நாடக மேடையில் சிவாஜிராவின் நடிப்பை பார்த்து இந்த நதி கடலாக வேண்டும் என முதன் முதலாக ஆசைப்பட்ட மனம்,கைத்தட்டி ரசித்த கரம் ராஜ் பகதூர்.இவர்தான் சிவாஜி ராவ் என்ற கண்டக்டரை நடிப்பு கல்லூரிக்கு படிக்க சென்னைக்கு ஓட்டிவந்த ட்ரைவர்.
1973 madras film institute ல் இரண்டு ஆண்டு நடிப்பு பயிற்சியோடு நிஜ வாழ்க்கையின் கோர முகங்களையும்,யதார்த்தத்தின் உண்மை பக்கங்களையும்,தோல்வியின் வலிகளையும்,வறுமையின் ரணங்களையும் சேர்த்து படித்தார் சிவாஜிராவ்.
நெறிஞ்சி முட்களும்,சரலை கற்களுமாய் நடந்த சிவாஜிராவின் பாதங்களுக்கு பட்டு கம்பளத்தை பரிசாய் கொடுக்க வந்தது ஒரு மாபெரும் கரம்.திறமைகளை தேடி தேடி தேனெடுக்கும் படைப்பு பட்டாம்பூச்சி கே.பாலச்சந்தர் விழிகளில் பரபர,கறுகறு,சுறு சுறு,துரு துருவென இருந்த சிவாஜிராவ் விழ சினிமா என்னும் வெள்ளித்திரையில் எழுதப்பட போகிற ஒரு மாபெரும் சரித்திரத்திற்கான முதற்புள்ளி வைக்கப்பட்டது.
கலைந்த முடி,திரண்ட தேகம்,காந்த விழிகள்,கட்டை மீசை,கிழிந்த கோட்,ஸ்டைல் நடை,அதிர் சிரிப்பு என கதவு தள்ளிக்கொண்டு வெள்ளித்திரையில் இந்த கருப்பு இளைஞன் நுழைந்தபோது சிவாஜிராவ் ரஜினிகாந்தாக இருந்தார்.
நாள் ஆகஸ்ட் 15 1975,ஆபூர்வ ராகங்கள் வெளியானபோது அது வெறும்படம்.ஆனால் இப்போது வரலாற்று ஆவணம்.முதல் படத்திலேயே கம்ல்,ஸ்ரீவித்யா, நாகேஷ்,மேஜர் சுந்தர்ராஜன் என பிரபல் நடிகர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி தன்னை கவனிக்க வைத்ததுதான் ரஜினி என்கிற தனிக்காட்டு ராஜாவின் பலம்.சிவப்பு நிறம் ஆட்சி செய்த வெள்ளித்திரையில் கறுப்புக்கோர் அழகுண்டு என்று காட்டிய தங்கமகன்.
அபூர்வ ராகங்கள் தொடர்ந்து மூன்றுமுடிச்சு,அவர்கள் என பாலச்சந்தர் படைப்புக்களில் வில்லனாய் நடித்த ரஜினிகாந்த இனி கதாநாயகனாக மாறலாம் என துனிந்து எடுத்த முடிவு ரஜினியின் திசையையே மாற்றியமைத்தது.
ரஜினி,கமல் இணைந்து நடித்த படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடிக்க இனி இருவரும் பிரிந்து தனியாக நடிக்கலாம் என பேசி முடிவெடுத்தனர்.இதுவே ரஜினியின் வெற்றிக்கு மாபெரும் வித்தாக அமைந்தது.
சினிமா என்றாலேசிங்காரம்,ஹாஸ்யம்,ரெளத்திரம்,காருண்யம்,பிபாஸ்தம்,பயாணகம்,வீரம்,அபுதம் என ஒன்பது ரசங்களை பற்றித்தான் பேசுவார்கள்.ஆனால் சூப்பர்ஸ்டார் காட்டியது 10 வது ரசம்.
எம்.ஜி.ஆர் என்றால் வீரம்,சிவாஜி என்றால் நடிப்பு,ஜெமினி கனேசன் என்றால் காதல்,கமல் என்றால் அழகு என ஆளுக்கொரு வரத்தோடு தமிழ் சினிமாவை ஆள யாரும் தொடாத,யாராளும் தொடமுடியாத ஒன்றை தொடங்கினார் சூப்பர் ஸ்டார் அதுஸ்டைல்.
நடை,உடை,பாவணை,டான்ஸ்,ஃபைட் என ரஜினி எது செய்தாலும் அனைத்திலும் ஸ்டைல் தான்.
சூப்பர் ஸ்டார்னா எப்டி ஸ்டைலோ அதுபோல பஞ்ச் டயலாக்.படத்துல பார்த்தா அது வெறும் வசனம் உட்கார்ந்து யோசிச்சா ஒவ்வொன்னும் தத்துவம்.
பைரவி படத்தோட விளம்பரத்துல த கிரேட் சூப்பர் ஸ்டார் ரஜினின்னு முதன் முதலா கலைப்புலி எஸ்.தாணு போஸ்டர்ல அடிச்சப்ப எம்.ஜி.ஆர்,சிவாஜிலாம் இருக்கும்போது எனக்கெல்லாம் எதுக்கு பட்டம்னு பதறிப்போனார் ரஜினி.
ரஜினி சொல்றது மாதிரி கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்குறது கிடைக்காது ஆங்..
புரட்சிதாசன் இயக்கிய நான் போட்ட சவால் திரைப்படத்துல சூப்பர் ஸ்டார் டைட்டில் வந்தாலும் சூப்பர் ஸ்டார்ங்கிற பட்டம் கொடிகட்டி பறக்க ஆரம்பிச்சது சரியா சொல்லனும்னா கவிதாலயா தயாரித்து சுரேஷ் கிருஷ்னா இயக்கிய அண்ணாமலை திரைப்படம்தான்.
அபூர்வ ராகங்கள் மூலமா தமிழ் நாட்டோட கதவ திறந்து சூப்பர்ஸ்டார் ஆன ரஜினிகாந்த்,
பாட்ஷா ல இந்தியாவின் சூப்பர் ஸ்டார். முத்து ல ஜப்பானின் சூப்பர்ஸ்டார்.
எந்திரன் வந்ததுக்கப்புறம் உலகம் முழுக்க சூப்பர் ஸ்டார்.
என்ன வந்தாலும் கலங்காத நம்ம சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்துல உடல் நிலையில் ஒரு சின்ன பிரச்சினை ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் கலங்கினார்கள் ப்ரார்த்தித்தார்கள்.கைமேல் பலன் .இதோ உங்கள் ரஜினிகாந்த் முழுமையாக குணமடைந்து ராணாவுக்காக தயாராகிறார்.
இனி ரானா தகவல்கள்:
சூப்பர் ஸ்டார் கதை எழுதி கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் மெகா பட்ஜெட் படம் ராணா. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இது அனிமேசன் படம் மட்டுமே அல்ல இது முழுக்க ரஜினி படம் என்று கூறப்பட்டுள்ளது. அனிமேசன் துறையை ரஜினியின் மகள் கவனிக்கிறார்..அதுதான் பயமாக இருக்கிறது அம்மனியிடம் அவ்வளவு திறமை!!!
சூப்பர் ஸ்டார் மூன்றுமுகத்திற்கு பிறகு மூன்று வேடங்களில் இப்போதுதான் நடிக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த்(Rajinikanth)-ராணா டக்குபாய்,சோனு சொக்குபாய்,மற்றும் வில்லன் புஸ்கார் (Rana Daggubhai and Sonu Sokkubhai (Twins) and as Third role Villian Pushkar (Triple role).ஆகிய மூன்று வேடங்கள்.
தீபிகா படுகோனே(Deepika Padukone )-இளவரசி ராணி லெக்ஷ்மி (Princess Ranilakshmi)
கஞ்சா கருப்பு(kanja karuppu)- நகைச்சுவை வேடம்(comedian)
Rana Press Meet KS ravikumar deepika Padukone and Soundarya Rajinikanth.
Rana Pooja and Rana First shoot Video
மிகச்சிறந்த கேமரா தொழில்நுட்பம் புதிய முயற்சி:
Arri Alexa என்ற புதிய கேமரா ரானாவில் பயன்படுத்தப்பட இருக்கிறது.பரிசோதித்து பார்த்ததில் இந்த புதிய ஃபார்மட்டில் படம் தெளிவாகவும் துல்லியமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.(The Alexa records 2880x1620 pixel in a 12-bit .ARRIRAW format.The Result is Amazing. )
ராணா பாடல்கள்
ராணாவின் இரண்டு பாடல்கள் முடியும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.(இசை வெளியீட்டு விழா தேதி வெளியிடப்படவில்லை)(Rana audio release date not yet)
ராணா பஞ்ச் டயலாக்ஸ்:
ரசிகர்கள் இப்பவே பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
1.போனா போகுதுன்னு மன்னிச்சி விடுறடுக்கு நான் சூனா பானா இல்லடா ராணா டா..!!! 2. நான் ராணா எங்கிட்ட வம்பு வேணா..!!! 3.வரும் ராணா வெல்லும் மக்களின் மனதை தானா..!!!
ராணா புகைப்படங்கள் அனைத்தும் கீழே;-
அப்ரம் லேட்டஸ் நியூஸ் என்னன்னா?ராணா நிறுத்தப்பட்டு விட்டதாக ஒரு புரளி நேற்று முதல் பரப்பப்பட்டு வருகிறது.ராணா வரும் என நம்புவோம்.