Thursday, March 15, 2012

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற


மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற

இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது  கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com/ இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும்   கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும்                                                                                                                                              

பைல்களை அழிக்க முடியவில்லையா?


பைல்களை அழிக்க முடியவில்லையா?

Share

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.

அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள்.

சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்

கணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?


கணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?

Share


கணனி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணனி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk  , சரி Format செய்தவுடன் கணனி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.




Sound file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open  பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open  செய்தால் அதுவும் இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள் பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை செலவழிப்பர்கள்.


இப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max.
இதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.




இதை எவ்வாறு பயன்படுத்துவது என கிழே உள்ள படிமுறையை பாருங்கள் 
இந்த மென்பொருள் install  செய்தவுடன். open செய்யவும்.







முதல் பக்கம் தோன்றும். பின்னர் உங்கள் கணனியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis  செய்து அதன் பட்டியல் தரும்.




அதில் தேவையான Drivers அல்லது Select All  தெரிவு செய்யமுடியும்
click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.
click next

பின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup  செய்ய சிறிது நேரம் எடுக்கும் 



backup  எடுதவுடன் Save  செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.




backup  செய்த Driver  தொகுப்பை உங்கள் Pen Drive  இல் அல்லது DVD இல்  எடுத்து கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.


Download

இந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர


இந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர

Share



நீண்ட நாள்  ஆய்வுக்கு பின் நம்முடைய ரூபாயின் சின்னத்தை அறிவித்து விட்டார்கள். உலகிலேயே பணத்திற்கு சின்னம் வைத்திருக்கும் ஐந்தாவது பெரிய நாடாக நம் நாடு வந்துவிட்டது.  (புதுசா எதாவது சொல்லூப்பா இதெல்லாம் எங்களுக்கு தெரியும்) . சரி அப்படி வெளியிட்ட சின்னத்தை நாம் எப்படி நம்முடைய கம்யுட்டரில் உபயோக படுத்துவது என்று இங்கு காணலாம்.


கீழே கொடுத்துள்ள ரூபாய் சின்னத்தை முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் .ttf பைலை காப்பி செய்து உங்கள் கம்ப்யுட்டரில்C:\Windows\Fonts என்ற இடத்திற்கு சென்று நீங்கள் காப்பி செய்த பைலை பேஸ்ட் செய்து விடுங்கள்.  இப்பொழுது உங்கள் கம்ப்யுட்டரில் MSword திறந்து கொள்ளுங்கள்.  Rupee Foradian Font செலக்ட் செய்து கொள்ளுங்கள் .


அடுத்து உங்கள் கீபோர்டில் 1 க்கு இடது புறமிருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுக்கு நம் இந்திய ரூபாயின் சின்னம் வரும்.
  

அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான் போது உங்கள் font மாற்றி நீங்கள் இந்திய ரூபாயின் சின்னத்தை பெறலாம்.