தமிழனின் புதிய வெப் அப்ளிகேசன் உங்களுக்காக முதல் பார்வை
நண்பர்களே உங்களுடைய குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளவும். எழுதி வைத்த குறிப்புகளை தேவைப்படும் பொழுது படிக்கவும். உங்களுடைய பர்சனல் விவகாரங்களை ஆன் டைரியில் எழுதி வைக்கவும். ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ஞாபகம் என்பதை நினைவு படுத்தும் வகையில் Nyabag என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேசன் கிடையாது. இதனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ தேவையில்லை. இது ஒரு வெப் அப்ளிகேசன் ஆகும்.
இதன் டைரி பகுதியில் அன்றைய பொழுது குறித்து எழுதும் பொழுது எந்த மாதிரி மன நிலையில் இருந்தீர்கள் என்று Smilies தேர்வு செய்ய முடியும்.
உதாரணத்திற்கு காதல் மூடில் இருந்தீர்கள் என்றால் Smiliey இரண்டு கண்களும் இதயமாகவும் மாறி உங்களை காதல் மூடிற்கு மாற்றி விடும்.
இதே நீங்கள் கோபமாக இருந்தீர்கள் என்றால் வேறு மாதிரியும் காட்டும் Smiliesகள் உள்ளன.
இதன் மூலம் அன்றைய பொழுது எவ்வாறு இருந்திருக்கும் என்று உங்கள் டைரியினை படிக்காமலேயே உங்கள் Smiliey மூலம் தெரிந்து கொள்வீர்கள்.
இவர்களுடைய டைரி பகுதியில் பதினான்கு வகையான Smilieகள் உள்ளன.
இவர்களுடைய இந்த அப்ளிகேசனில் டாஸ்க் என்ற பகுதியில் உங்களுடைய அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் உங்களுடைய நினைவூட்டல்களை பதிந்து வைத்தால் உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு நினைவூட்டல் செய்யும்.
இந்த இணையத்தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதுமானது உடனே சேர்ந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் பீட்டா அளவில் இருப்பதால் இன்னும் நிறைய வசதிகள் செய்து தருவார்கள் என நம்பலாம். அத்துடன் இந்த மென்பொருள் vheeds.com நிறுவனத்தில் முதல் இலவச உலகளாவிய மென்பொருள் ஆகும்.
இதை உருவாக்கியவர்கள் நமது ஈரோட்டில் உள்ல வாழையக்கார தெருவில் உள்ள VHEEDS TECHNOLOGY SOLUTIONS நிறுவனத்தினர் என்னும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இவர்களின் இந்த இணையதள அப்ளிகேசன் வெற்றி பெற வாழ்த்துவோம். இத நமக்கு அறிமுகப்படுத்தி நம் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறிய வசந்த் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
தமிழன் உருவாக்கிய மென்பொருள் உலகம் முழுவதும் பரவ என்னாலான சிறு முயற்சிதான் இது. இதை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தமிழரின்
பெருமை பரவட்டும்.
இணையத்தள சுட்டி
இவர்களை பற்றிய சிறு குறிப்புகள் குறித்து அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை இங்கு கொடுத்திருக்கிறேன்
No comments:
Post a Comment