CPUZ – கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்
- அண்மையில் நான் பயன்படுத்தும் கணினியில் , அதிகசக்திவாய்ந்த மென்பொருளை
நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் எனது கணினியின் நினைவகம் (RAM) குறைவாக இருந்ததால் மென்பொருளை நிறுவ முடியவில்லை. கணினியில் உள்ள வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழிமுறைகள் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.
கொஞ்ச நஞ்சம் மென்பொருளை பற்றி தெரிந்திருந்தாலும் ,வன்பொருளை பற்றி
அவ்வளாக தெரிந்தது கொள்ள நாம் விரும்புவதில்லை.அதெல்லாம் வன்பொருள் நிர்வாகியின் வேலை என்று விட்டுவிடுவோம்.நானும் அப்படித்தான் இருந்தேன்.இந்த பிரச்சனையால் அந்த அவசியம் ஏற்பட்டது.இணையத்தில் தேடிய போது CPUZ நிறுவனம் இதற்கு ஒரு எளிமையான ,மிகவும் இலகுவான இலவச மென்பொருளை உருவாக்கியுள்ளது.
கணினியை (CPU) திறந்து பார்க்காமலே ,வன்பொருள் பற்றி மிக பயனுள்ள தகல்களை பெறலாம்.உதாரணமாக கணினியில் நினைவகத்திற்கு (RAM) என்று ஒதுக்கப்பட்ட Slots
எத்தனை என்பதையும் அதில் உள்ள RAM பற்றி விவரங்களையும் அறியலாம்.இந்த மென்பொருளை நிறுவத்தேவையில்லை.
தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இப்போது cpuz.exe என்பதனை டபுள் கிளிக் செய்திடுங்கள்.அவ்வளவுதான்.
சில நொடிகளில் ,உங்கள் கணினியின் வன்பொருளை பற்றி அனைத்து விவரமும்…
இதில் CPU,Caches,Mainboard,Memory,SPD,Graphics போன்றவற்றின் தகவல்களை காணலாம்.பயன்படுத்தி பாருங்கள்.இனி நீங்களும் ஒரு குட்டி வன்பொருள் நிர்வாகி…
CPU :
SPD:
No comments:
Post a Comment