Friday, July 29, 2011

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

SHAZAIN

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

June 26th, 2011 | Tags:
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

http://www.freeopener.com/freeopener_setup.exe

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

http://www.freeopener.com/formats.html

கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்

CPUZ – கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்

  • அண்மையில் நான் பயன்படுத்தும் கணினியில் , அதிகசக்திவாய்ந்த மென்பொருளை
    நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் எனது கணினியின் நினைவகம் (RAM) குறைவாக இருந்ததால் மென்பொருளை நிறுவ முடியவில்லை. கணினியில் உள்ள வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழிமுறைகள் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.

கொஞ்ச நஞ்சம் மென்பொருளை பற்றி தெரிந்திருந்தாலும் ,வன்பொருளை பற்றி
அவ்வளாக தெரிந்தது கொள்ள நாம் விரும்புவதில்லை.அதெல்லாம் வன்பொருள் நிர்வாகியின் வேலை என்று விட்டுவிடுவோம்.நானும் அப்படித்தான் இருந்தேன்.இந்த பிரச்சனையால் அந்த அவசியம் ஏற்பட்டது.இணையத்தில் தேடிய போது CPUZ நிறுவனம் இதற்கு ஒரு எளிமையான ,மிகவும் இலகுவான இலவச மென்பொருளை உருவாக்கியுள்ளது.

கணினியை (CPU) திறந்து பார்க்காமலே ,வன்பொருள் பற்றி மிக பயனுள்ள தகல்களை பெறலாம்.உதாரணமாக கணினியில் நினைவகத்திற்கு (RAM) என்று ஒதுக்கப்பட்ட Slots

எத்தனை என்பதையும் அதில் உள்ள RAM பற்றி விவரங்களையும் அறியலாம்.இந்த மென்பொருளை நிறுவத்தேவையில்லை.
தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இப்போது cpuz.exe என்பதனை டபுள் கிளிக் செய்திடுங்கள்.அவ்வளவுதான்.
சில நொடிகளில் ,உங்கள் கணினியின் வன்பொருளை பற்றி அனைத்து விவரமும்…
இதில் CPU,Caches,Mainboard,Memory,SPD,Graphics போன்றவற்றின் தகவல்களை காணலாம்.பயன்படுத்தி பாருங்கள்.இனி நீங்களும் ஒரு குட்டி வன்பொருள் நிர்வாகி…
CPU :
SPD:

Thursday, July 28, 2011

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher

>> JUL 24, 2011

இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய பார்மேட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.

இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது. WebVideoFetcher என்ற இந்த இணையதளம் கூகிள், பேஸ்புக், யூடியுப் (Google, youtube, facebook) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணிணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது. நீங்கள் எதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை காப்பி செய்து இந்த தளத்தில் இட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.

இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும். ஆடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப
(Download size) பெற முடியும்.

இணைய முகவரி : http://www.webvideofetcher.com

இந்த இணையதளத்தின் சேவையைப் பயன்படுத்த உங்கள் கணிணியில் ஜாவா வசதி அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
http://www.java.com/en/download/

கடித முகவரிகளை சுலபமாக பிரிண்ட் செய்ய

SHAZAIN NET CAFE

கடித முகவரிகளை சுலபமாக பிரிண்ட் செய்ய

பக்கம் பக்கமாக கடிதம் தட்டச்சு செய்து எழுதுவோம்...ஆனால் முகவரி மட்டும் கையில் எழுதுவோம். வேர்டில் அதற்கான செட்டிங்ஸ் இருந்தாலும் நமக்கு பொறுமை இருப்பதில்லை. அந்த குறையை போக்க இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 1 எம்.பி.க்கும் குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் From அட்ரஸ்பாரில் நமது பெயரும் To வில் அனுப்புவரது பெயர்களும் தட்டச்சு செய்துவிடவும். முழு முகவரி தட்டச்சு செய்து முடித்ததும் சேவ் கொடுக்கவும்.உங்களுக்கு To என்பதின் கீழே உள்ள Name பாக்ஸின் கடைசியில் உள்ள சின்ன கட்டத்தை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்கொடுத்த பொறுநரது முகவரி இருக்கும்.தேவையான முகவரியை செலக்ட் செய்தால் முதல் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும்.
From கடட்தத்தில உங்களது முகவரியும் To கட்டத்தில் பெறுநருடைய முகவரியையும் தட்டச்சு செய்து சேவ் கொடுங்கள். இதனைப்போல நீங்கள் எவ்வளவு முகவரி தட்டச்சு செய்கின்றீர்களோ அனைத்தையும் தட்டச்சு செய்து சேவ் செய்துகொள்ளுங்கள்.
யாருக்கு கடிதம் அனுப்ப போகின்றீர்களோ அப்போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய கட்டத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்கையில் நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து முகவரிகளும் தெரியும். தேவையானதை செலக்ட் செய்து பின்னர் நேரடியாக பிரிண்ட் கொடுத்துக்கொள்ளலாம்.பிரிண்டரின் அளவினையும் செட் செய்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

Tuesday, July 26, 2011

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க.

சந்தேகங்களை தீர்த்துவைக்க முயற்சிக்கிறேன்.

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க...

கணணியில் இருந்து Mozilla Firefox மூலம் இணைய உலா வருபவர்களுக்கு
இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு இது ஒரு பயனுள்ள பதிவு

Mozilla Firefox மூலம் இணைய உலா வரும் பயனர்கள் உங்கள் உலாவியில் ஒரு சிறிய Tweak Network Add-on நிறுவி அதில் ஒரு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்..
இதன் மூலம் ஒரு சிறப்பான இணைய உலா அனுபவத்தினையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Mozilla Firefoxல் உங்கள் இணைய வேகத்தினை அதிகரித்து ஒரு சிறப்பாக இணைய உலா அனுபவத்தை பெறலாம் 

1.கீழே உள்ள தரவிரக்க சுட்டியை சொடுக்கி Tweak Network Add-on தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள் 

(தரவிறக்க  சுட்டியை அழுத்தியதும் Firefox இன் மேல் சட்டத்தில் வரும் மஞ்சள் நிற பட்டியில் Allow உள்ள என்னும் பட்டனை அழுத்தியவுடன் Install செய்யும்படி கேட்கும் Install எனும் 
பட்டனை அழுத்தி Install செய்து கொள்ளலாம்)

2.பின் உங்கள் Firefox உலாவியினை Restart செய்து கொள்ளுங்கள்

3.அடுத்து உங்கள் உலாவியில் TOOL மெனு சென்று Tweek Network Setting என்பதை அழுத்துங்கள்

அழுத்தியவுடன் வரும் Tweek Network Setting சாளரத்தில்,

  • pipelining 
  • proxy pipelining  என்பதற்கு முன்னால் உள்ள பெட்டிகளில் சரி அடையாளத்தை இடவும்
  • பின் POWER எனும் பட்டனை அழுத்தவும்

பின் சாளரத்தில் உள்ள APPLY , OK என்பதை அழுத்தி சேவ் செய்து கொள்ளுங்கள்

இனி நீங்கள் Firefox  ஊடாக உலாவுகையில் முன் இருந்ததை விட வேகம் அதிகரித்திருப்பதனை உணரலாம்..

இந்த பதிவு பயனுள்ளது என கருதியினால் இது மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என கருதினால் கீழே சென்று வாக்களிக்கவும்...
.