Wednesday, February 29, 2012

Torrent தொழில்நுட்ப

Torrent தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்


Torrent ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் torrentல் இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3 நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில் விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல Fileகளை டவுன்லோட் செய்யலாம். etc


Torrent செயல்படும் முறை

torrent உங்களுக்காக Download ம் செய்கிறது அதே நேரத்தில் Upload ம் செய்கிறது. அதாவது Peer to Peer முறையில் செயல்படுகிறது.

Torrentல் எப்படி டவுன்லோட் செய்வது

torrent Fileகளை பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. அதிலிருந்து நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. முதலில் U torrent ஐ நம் கணிணியில் Install செய்து கொள்ளவேண்டும்.
torrent Fileகள் வழங்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருள் அல்லது படங்களின் File ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Download செய்யப்பட்ட File ஐ டபுள் கிளிக் பண்ணினால் அது நேரடியாக U torrentல் ஓபன் ஆகி தரவிறக்கம் செய்ய தொடங்கிவிடும்.

Torrentல் Fileகளை செலக்ட் செய்வது எப்படி


உங்களுக்கு தேவையான Fileகளை செலக்ட் செய்யும்போது நிறைய Seeders உள்ள Fileகளாக தேர்வு செய்யவும். அப்போதுதான் வேகமாக டவுன்லோட் ஆகும்.



குறிப்பு - குறைந்தது 1 Seed உள்ள Fileகளையாவது செலக்ட் செய்யவும். இல்லாவிட்டால் முழுவதும் டவுன்லோட் ஆகாது.


தமிழ் திரைப்படங்கள் கிடைக்கும் சிறந்த தளம்

Uyirvani




இந்த தளத்தில் புதிய திரைப்படங்கள் உடனே கிடைக்கும். Blu Ray படங்கள் கிடைக்கின்றன. ஒரிஜினல் பிரிண்ட், வீடியோ சாங்ஸ், தமிழ் மொழிமாற்று படங்கள், புதிய பாடல்கள், உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுகிறார்கள்.

கட்டண மென்பொருள்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்
Lava Goes Android; Launches S12  Written by Abhijit    October 26th, 2011    Permalink to Post    Comments  Share on    Facebook    Twitter    StumbleUpon    Reddit    Email Lava Mobiles has launched their first Android powered mobile handset in India, called the Lava S12. At 13mm, the Lava S12 is a very slim mobile handset and has a matte leather finish. The phone comes pre-installed with a good number of useful applications which helps you get started with Android faster if you are a newbie. Lava S12 Lava has put its own 3D User Interface into the phone along side Android 2.2 Froyo that transforms the phone’s home screen into a virtual 3D space with 16 customizable home screens. Users can further customise the phone with the help of unique smart folders and animated 3D widgets. Some of the pre-installed applications on the phone include Saavn, Advanced Task Killer, Office Suite (for PDF, MS Office 2010), TuneWiki, Zenga TV (with 1 year free subscription) & MoneyControl. Specs & Features 600 MHz Qualcomm processor 3.2 inch HVGA screen with Capacitive touch at 480 by 320 pixels resolution 5MP Camera with zoom. Connectivity: 3G, Wi-Fi, Bluetooth, Portable Wi-Fi hotspot 32GB expandable memory. Dimensions: 11.7 cm by  5.75 cm by 1.34 cm Runs on Android 2.2 (Froyo) Operating system with Lava’s 3D User Interface SlideIT keyboard that lets users input text by sliding fingers just like Swype. The Lava S12 mobile phone retails at a price of Rs. 9999/- and is available at all retail outlets and on major e-commerce portals. The phone also comes with a 2GB memory card absolutely free of cost. Lava S12 Side View Front View

Read more at: http://gadgetizor.com/lava-s12/8641/ - via Gadgetizor.com

ஹஜ் செய்வது எப்படி - E-book ~ SHAZAIN

ஹஜ் செய்வது எப்படி - E-book


ஹஜ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றிய வழிக்காட்டி மென்புத்தகம். டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


ஹஜ் செய்வது எப்படி

Mac OS

ஆப்பிளின் Mac OS இலவசமாக டவுன்லோட் செய்ய



ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ராடிங் சிஸ்டம் Mac 10.6 ஐ கிழே உள்ள லிங்கின் வழியாக இலவசமாக தரவிறக்கி கொள்ளவும்.


Mac OS X 10.6 ( 4.38 Gb )

Windows 8

Windows 8 ன் keyboard Shortcut கீ

Windows 8 ன் சோதனை பதிப்பு தற்போது வெளிவந்துவிட்ட நிலையில் அதன் keyboard Shortcut கீ களை அறிவோம். Windows 8 சோதனை பதிப்பு கிடைக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.





விண்டோஸ் 8 சோதனை பதிப்பு 32 bit

Photoshop CS 5 - Full Version இலவசமாக

Photoshop CS 5 - Full Version இலவசமாக




Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 5. இதன் சந்தை மதிப்பு $999.00. இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்


Photoshop CS 5 - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


அல்லது Torrent வழியாக இந்த Linkஐ கிளிக் செய்து Download செய்து கொள்ளவும்.


முதலில் மேலே உள்ள Photoshop CS 5 Trial Version ஐ Download செய்து install பண்ணும்போது இந்த கீயை (1330-1635-1352-8927-5820-3349) கொடுத்து install செய்து முடிக்கவும்.


Photoshop CS5 ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம்


Photoshop CS5 - Crack Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


மேலே உள்ள Crack ஐ Download செய்து WinRar மூலமாக Extract செய்து Copy பண்ணி வைத்துக்கொள்ளவும். முதலில் C கோலன் ஓபன் பண்ணவும்.


அதில் Program files ஐ ஓபன் பண்ணவும்



பிறகு Adobe ஓபன் பண்ணவும்



பிறகு Adobe Photoshop CS5 ஓபன் பண்ணவும்



முதலில் copy செய்து இருந்த Crack ( amtlib.dll ) ஐ இப்போது இங்கே paste செய்ய வேண்டும்



paste செய்யும்போது Overwrite All கொடுக்கவேண்டும், அவ்வளவுதான்.



உங்கள் Photoshop CS5 Full Version ஆயிடுச்சு

USB வழியாக Window 7 நிறுவுவது எப்படி ?

USB வழியாக Window 7 நிறுவுவது எப்படி ?


DVD Drive இல்லாத, DVD Drive வேலை செய்யாத Laptap, Pc போன்றவைகளுக்கு
எவ்வாறு window 7 OS நிறுவுவது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது. நேரடியாக ISO கோப்பினை USB யில் copy செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை MicroSoft அளித்துள்ளது

Windows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து Download செய்து கொள்ளுங்கள். இதனை திறக்கும் போது வரும் முதல் விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள Windows7 இன் ISO கோப்பினை கொடுக்கவும். பின்னர் 'Next' கிளிக் செய்யுங்கள்.



USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக் செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் குறைந்து 4GBஅளவுள்ள USB உபயோகப்படுத்துங்கள்.




அடுத்த விண்டோவில் USB டிரைவை தேர்ந்தெடுத்து கொள்ளவும். 'Begin Copying' ஐ Click செய்யவும்.



சில நிமிடங்களில் COPY செய்து முடித்துவிடும். இப்போது உங்கள்Windows7 இன்ஸ்டாலேஷன் USB தயார் ஆகிவிடும்.


இப்போது நீங்கள் BIOS SETUPஇனுள் செல்லவேண்டும். BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக USB Drive ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.


அதன் பின் செய்த மாற்றத்தை SAVE பண்ணவேண்டும். இதற்காக F10கீயை அழுத்தத் வேண்டும். இப்போது நீங்கள் செய்த மாற்றம் சரியா என்ற வினா கேக்கப்படும். அதற்கு ’Y’ என்பதை அழுத்தி ENTERபண்ணினால் போதும் செய்த மாற்றங்கள் பதிவாகிடும். இப்போது விண்டோஸ் இயங்குதளம் நிறுவ ஆரிம்பித்துவிடும். அதனைத் தொடர வேண்டியதுதான்..

குற்றாலம் அருவி


குற்றாலம் அருவி


     குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. 

     குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

     தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

     குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது. 

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.

7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது. 

படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. 

மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலம் சித்தர சபையாகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம் : பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்கள் : குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் வரும் பயணிகள் தரிசனம் செய்ய பிரசித்த பெற்ற குற்றால நாதர் கோவில், இலஞ்சிகுமாரர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலை கோவில், புளியரை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் கோவில், அச்சன்கோவில், மற்றும் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.

ஒகேனக்கல் அருவி


ஒகேனக்கல் அருவி


     ஒகேனக்கல் அருவி தமிழக கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லில் தனி அருவியாக இல்லாமல் பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

     கன்னடத்தில் "ஹோகே' என்றால் "புகை'. "கல்' என்றால் பாறை. பலத்த ஆரவாரத்துடன் 20 மீட்டர் உயரத்தில் இருந்து பாறைகளின் மீது நீர்விழுந்து வெண்மையான புகை மண்டலத்தை ஏற்படுத்துவதால் இப்பகுதி "ஹோகேனக்கல்' என்று அழைக்கப்பட்டு பின்னர் ஒகேனக்கல்லானது.

     இருபுறமும் உயர்ந்த குன்றுகள். இடையில் காட்டாறாய் ஓடும் காவிரி. பரிசலில் சென்றால் பெரும் சப்தத்துடன் விழும் அருவிக்கு மிக அருகிலேயே சென்று கண்டு களிக்கலாம்.

     ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு அன்று இங்கு விழா நடைபெறுகிறது. அன்று புதுமணத் தம்பதியினர் இப்புனித நதியில் நீராடினால் எல்லா வளமும் பெறுவர் என்பது ஜதீகம்.

     உல்லாசப் பரிசல் சவாரி, புத்துணர்வூட்டும் எண்ணெய் மசாஜ், தொங்கும் பாலம், சிறுவர் பூங்கா, உயிரியல் பூங்கா, முதலைப்பண்ணை என சுவாரசியமாய் பொழுதை நகர்த்த பல்வேறு இடங்கள் இங்குள்ளன. 

தமிழக மலைவாசத் தலங்கள்-கொல்லி மலை


கொல்லி மலை

     கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.

     பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

     முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும், அதற்கிணங்கி கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் பல கதைகள் கூறப்படுகின்றன. கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது. கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர். 

அறப்பளீஸ்வரர் கோவில்

     சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயர் வந்தது. இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் இறைவியார் தாயம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள். அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று. இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது. எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன் பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை வல்வில் ஓரி கட்டியதாக கூறப்படுகிறது. உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளார். கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு. இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

ஆகாய கங்கை அருவி

     கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது. 

முருகன் கோவில்

     அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.



வியூ பாயிண்ட்

     சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

வல்வில் ஓரி விழா
     செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை

     தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்

     அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

     கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.