தமிழகம் முன்னணி மாநிலமாக வேண்டும் : மருத்துவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
மருத்துவத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மருத்துவர்கள் ஆதரவு தர வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 3ம் முறையாக கலந்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர். பெயரில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக் கழகம் இந்தியாவில் 2வது பெரிய மருத்துவ பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது.மாநிலத்தில் மருத்துவ கல்வியின் உயர்தரத்தை பராமரிப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது.ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. சமுதாயத்தின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம். நோய் வருமுன் காக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தியாவில், மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பொதுசுகாதாரத்தில் குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலத்தில் 99.8 சதவீதம் பிரசவம் மருத்துவமனைகளில் தரமான, பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு நடைபெறுகிறது.மருத்துவ வசதி கிடைக்காத குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்க வகை செய்யும் நடமாடும் மருத்துவமனை திட்டம் விரைவில் தொடங்கப்படும்.ஏற்கனவே செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், கூடுதல் மருத்துவ பணியாளர்கள், ஆய்வுக்கூட வசதியுடன் பலப்படுத்தப்படும். மருத்துவக் குழுவினர் தொலைதூர கிராமங்களுக்கு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார்கள்.மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனடிப்படையில் மகளிர் நலனுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது செயல்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மகளிருக்கு மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.சுகாதாரத்தைப் பேணும் வகையில் கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும். சேரிகளில் வசிப்பவர்கள், நலிந்த பிரிவினர் பயன்பெறும் வகையில் 75 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.தமிழ்நாட்டில் ஏழைகள் மற்றும் கீழ்நடுத்தர மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். உலக வங்கி நிதியுதவியில் செயல்படுத்தப்படும் தமிழக சுகாதாரத் திட்டத்தின் கீழ் தாலுகா மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படுகின்றன.இந்த திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்படும் நிதியில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் நோய் கண்டறியும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து படிப்படியாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கம்ப்ஹீட்டர் வசதியுடன்கூடிய மருத்துவ ஆய்வுக்கூடங்கள் நிறுவப்படும். தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டு கீழ் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கச் செய்வதில் எனது தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தலைக்காய சிகிச்சைப் பிரிவுடன்கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. அதுபோன்ற மருத்துவமனை அமைக்கும் பணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இதுபோல திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மையம், திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும்.இந்த முயற்சிகளின் மணிமகுடமாக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு (புதிய தலைமை செயலக கட்டிடம்) பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிளாக் ஏ கட்டிடத்தில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், பிளாக் பியில் புதிய மருத்துவக் கல்லூரியும் அமைக்க எனது அரசு முடிவு செய்துள்ளது.பிளாக் ஏ கட்டிடத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிகிச்சைக்கான நிபுணர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு, அதிநவீன மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட்ட பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மருத்துவமனை, டெல்லியில் உள்ள சூஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் விளங்கும்.மருத்துவ காப்பீட்டுத் திட்டம் :முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எனது அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம், 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைகளைப் பெற முடியும்.இந்த காப்பீட்டுத் தொகை, குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டும் ரூ.11/2 லட்சமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். நோய் பரிசோதனை செலவு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு 5 நாட்களுக்கு மருந்துகளுக்கு ஆகும் செலவு, பயணச் செலவு ஆகியவற்றையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பெறலாம்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இதர மருத்துவக் கல்வி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தரமான மருத்துவக் கல்வி அளிப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.மருத்துவ, துணை நிலை மருத்துவ படிப்புகளில் மதிப்பீட்டு முறை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும் வகையில் இந்தப் பல்கலைக் கழகம் நவீன முறையை பின்பற்றுவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக டாக்டர்களுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவ மாணவர்கள் தங்களது மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.இங்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், வாழ்நாள் சாதனை விருது பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை ஆகும். எனவே, இங்கு பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
மருத்துவத்துறையில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மருத்துவர்கள் ஆதரவு தர வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 3ம் முறையாக கலந்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர். பெயரில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக் கழகம் இந்தியாவில் 2வது பெரிய மருத்துவ பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது.
மாநிலத்தில் மருத்துவ கல்வியின் உயர்தரத்தை பராமரிப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. சமுதாயத்தின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம். நோய் வருமுன் காக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தியாவில், மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பொதுசுகாதாரத்தில் குறிப்பாக மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலத்தில் 99.8 சதவீதம் பிரசவம் மருத்துவமனைகளில் தரமான, பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு நடைபெறுகிறது.
மருத்துவ வசதி கிடைக்காத குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்க வகை செய்யும் நடமாடும் மருத்துவமனை திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
ஏற்கனவே செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், கூடுதல் மருத்துவ பணியாளர்கள், ஆய்வுக்கூட வசதியுடன் பலப்படுத்தப்படும். மருத்துவக் குழுவினர் தொலைதூர கிராமங்களுக்கு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார்கள்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனடிப்படையில் மகளிர் நலனுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது செயல்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மகளிருக்கு மட்டுமல்லாமல் பிறக்கும் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
சுகாதாரத்தைப் பேணும் வகையில் கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கப்படும். சேரிகளில் வசிப்பவர்கள், நலிந்த பிரிவினர் பயன்பெறும் வகையில் 75 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் ஏழைகள் மற்றும் கீழ்நடுத்தர மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். உலக வங்கி நிதியுதவியில் செயல்படுத்தப்படும் தமிழக சுகாதாரத் திட்டத்தின் கீழ் தாலுகா மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்படும் நிதியில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் நோய் கண்டறியும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து படிப்படியாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கம்ப்ஹீட்டர் வசதியுடன்கூடிய மருத்துவ ஆய்வுக்கூடங்கள் நிறுவப்படும். தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டு கீழ் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கச் செய்வதில் எனது தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது.
சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தலைக்காய சிகிச்சைப் பிரிவுடன்கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. அதுபோன்ற மருத்துவமனை அமைக்கும் பணி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இதுபோல திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.100 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மையம், திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும்.
இந்த முயற்சிகளின் மணிமகுடமாக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு (புதிய தலைமை செயலக கட்டிடம்) பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிளாக் ஏ கட்டிடத்தில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், பிளாக் பியில் புதிய மருத்துவக் கல்லூரியும் அமைக்க எனது அரசு முடிவு செய்துள்ளது.
பிளாக் ஏ கட்டிடத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் உயர் சிகிச்சைக்கான நிபுணர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு, அதிநவீன மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட்ட பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மருத்துவமனை, டெல்லியில் உள்ள சூஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் விளங்கும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டம் :
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எனது அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம், 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைகளைப் பெற முடியும்.
இந்த காப்பீட்டுத் தொகை, குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டும் ரூ.11/2 லட்சமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். நோய் பரிசோதனை செலவு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு 5 நாட்களுக்கு மருந்துகளுக்கு ஆகும் செலவு, பயணச் செலவு ஆகியவற்றையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பெறலாம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இதர மருத்துவக் கல்வி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தரமான மருத்துவக் கல்வி அளிப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மருத்துவ, துணை நிலை மருத்துவ படிப்புகளில் மதிப்பீட்டு முறை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கும் வகையில் இந்தப் பல்கலைக் கழகம் நவீன முறையை பின்பற்றுவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக டாக்டர்களுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவ மாணவர்கள் தங்களது மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இங்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், வாழ்நாள் சாதனை விருது பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்யும் சேவை ஆகும். எனவே, இங்கு பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்